யாழ்ப்பாணக் குடாநாட்டில், நேற்றிரவு கடும் மழையின் போது, காங்கேசன்துறை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் கடலுக்குள் சரிந்து வீழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
சுனாமி முன்னெச்சரிக்கை மற்றும், காலநிலை தொடர்பான தரவுகளைச் சேகரிப்பதற்காக, அமைக்கப்பட்டிருந்த கோபுரமே கடல் அரிப்பினால் சரிந்து வீழ்ந்துள்ளது.
அதேவேளை, நேற்றுத் தொடக்கம், யாழ்ப்பாண குடாநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நீடித்து வருகிறது.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 66.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வளிமண்டல ஆராய்ச்சித் திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.பிரதீபன் தெரிவித்துள்ளார்.