யாழ்.மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா கொத்தணியில் மேலும் 3 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நேரடி தொடர்புடைய 47 மற்றும் 21 வயதுடைய பெண்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வுகூடத்தில் இன்று 110 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.