அடுத்த ஆண்டில் 30 கோடி பேருக்கு செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை, இந்தியாவில் உற்பத்தி செய்யவுள்ளதாக, ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் (Sputnik V) தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதற்கு, 110 நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இவற்றில், 10 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் 4 பெரிய உற்பத்தி நிறுவனங்களுடன் உடன்பாடு செய்துள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்புக்கான 30 கோடி முறை செலுத்துக் கூடிய ஸ்புட்னிக் மருந்துகளை அடுத்த ஆண்டு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என்றும், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.