முல்லைத்தீவு , வவுனிக்குளம் குளக்கட்டில் பயணம் செய்த போது, குளத்தில் வீழ்ந்த வாகனத்தில் பயணம் செய்த மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தந்தையும் மூன்று குழந்தைகளும் பயணம் செய்த வாகனம், நேற்று மாலை, குளத்தினுள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது 13 வயதுடைய, சஞ்சீவன் என்ற சிறுவன் மீட்கப்பட்ட போதும் பின்னர் உயிரிழந்தார்.
அதேவேளை 37 வயதுடைய ரவீந்திரன் என்பவரும், அவரது 3 வயது பெண் குழந்தையான சார்ஜனாவும் காணாமல் போயிருந்தனர்.
இரவிரவாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட தேடுதல்களின் பின்னர், இன்று காலை இரண்டு பேரின் சடலங்களும், சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.