ரொரன்ரோவில் மில்டன் (Milton) பகுதியில், குளிரில் உறைந்திருந்த குளத்தில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்ற கூறப்படுகிறது.
பனி உறைந்திருந்த குளத்தில் விளையாடிய இரண்டு சிறுவர்களில் ஒருவரே, குளத்துக்குள் மூழ்கியுள்ளார்.
மற்றைய சிறுவன் அளித்த தகவலின் பேரில், அயலவர்கள் மற்றும் மீட்பு குழுவினர், 15 நிமிடம் போராடி சிறுவனை மீட்டனர்.
எனினும், சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்