பா.ஜ.க. தலைவர் முருகன் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என்று அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அ.தி.மு.க. முடிவு செய்தாலும், அதை பா.ஜ.க. தான் அறிவிக்கும். தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன், கூறியிருந்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி, பா.ஜ.க. தலைவர் முருகன் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முருகன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் பா.ஜ.க. தலைமை அவரை நீக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்