ஸ்ரீலங்காவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரைப் பதிவு செய்வது குறித்து ஊடகத்துறை அமைச்சு ஆராய்ந்து வருவதாக, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
முகநூல் பயனர்களும், அரசாங்கத்தினால் பதிவு செய்யப்படுபவர்களில் உள்ளடங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முகநூல் மூலம், தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
எனினும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் எவ்வாற பதிவு செய்யப்படவுள்ளனர் என்ற தகவலை அமைச்சர் ரம்புக்வெல்ல வெளியிடவில்லை.
அதேவேளை, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரை பதிவு செய்யும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன.