ஒன்ராறியோ மாகாணம் முழுவதும், நத்தாருக்கு முன்னர், முடக்க நிலைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
எதிர்வரும் 24ஆம் நாள் அதிகாலை 12.01 மணி தொடக்கம், இந்த முழு அளவிலான முடக்கநிலை அறிவிக்கப்படவுள்ளது.
இந்த முடக்கநிலை, தென்பகுதியில் குறைந்தது 28 நாட்களும், வடக்கு பகுதிகளில் 14 நாட்களும் நீடிக்கும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது,
மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது போன்று இந்த முடக்க நிலை இருக்கும் என்றும், கூறப்படுகிறது.