263 ஆண்டுகள் பழைமையான வயலின் இசைக்கருவி ஒன்று ரொறன்ரோ சுரங்கப் பாதையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மாலை, 6.30 மணியளவில் இந்த வயலின் இசைக்கருவி காணாமல் போனதாகவும், அதனைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியைக் கோருவதாகவும், Queen City காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
1757ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த வயலின் இசைக்கருவி மிகவும் பெறுமதி வாய்ந்தது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.