வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் பயணித்த வாகனம் மீதும், அவரது சாரதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இளவாலை- வசந்தபுரம் பகுதியில் இன்று மாலை 6.40 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தின் போது,பிரதேச சபை தவிசாளரின் வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன், சாரதி மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், தாக்கியவரின் பெயர், விபரங்கள் ஏதும், முறைப்பாட்டில் குறிப்பிடப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். இளவாலை, சேந்தாங்குளம் பகுதியில், வெள்ளவாய்க்கால் அமைக்கும் பணியினை பார்வையிட்டு விட்டு வீடு திரும்பும் போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது





