கனடாவில் கார்பன் வரிகளை கடுமையாக உயர்த்தியதன் மூலம் கனேடிய விவசாயிகளின் கோவத்துக்கு பிரதமர் ரூடோ ஆளாகியுள்ளதாக ஆய்வுசெய்தியொன்றில் கூறப்பட்டுள்ளது.
2050ஆம் ஆண்டில் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான கனடா அரசாங்கத்தின் புதிய காலநிலை நடவடிக்கை திட்டத்தின் படி, 2023ஆம் ஆண்டு முதல் கார்பன் விலையை ஆண்டுக்கு 15 டொலராக உயர்த்துவதாகவும், 2030ஆம் ஆண்டில் ஒரு டசினுக்கு 170 டொலராக உயர்த்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2016இல் வகுக்கப்பட்ட அசல் திட்டத்தில், லிபரல் கட்சி அரசாங்கம் ஒரு டன்னுக்கு 20 டொலர் என்ற கார்பன் வரியை விதித்தது, இது 2022ஆம் ஆண்டில் 50 டொலராக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.