அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு எதிராக, டிரம்ப் தரப்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க தேர்தல் கல்லூரி, ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்து, புதிய ஜனாதிபதியாக அவர் பதவியேற்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ட்ரம்ப் தரப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடனின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், அங்கு தேர்தல் கல்லூரி உறுப்பினர்களை மாகாண சட்டமன்றம் தேர்வு செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.