ஐக்கிய மக்கள் சக்திக்கான புதிய யாப்பொன்றை அங்கிகரித்துக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு கடந்த சனிக்கிழமை கூடியபோதே புதிய யாப்புக்கு அங்கிகாரம் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.
நிறைவேற்றுக்குழுவுக்கு கட்சியின் தலைவரால் 50பேரை தெரிவுசெய்யலாம். என்றாலும் ஏனைய உறுப்பினர்களை தேர்தல் மூலம் தெரிவுசெய்வதன் மூலம் 500க்கும் மேற்பட்டவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.
கட்சி தலைவரால் மேற்கொள்ளப்படும் அனைத்து நியமனங்களும் முகாமைத்துவ குழுவின் பரிந்துரைக்கமைய மற்றும் கட்சி செயற்குழுவின் அனுமதியின் பிரகாரமே இடம்பெறும்.
அதனால் கட்சி தலைவருக்கு நினைத்த பிரகாரம் செயற்பட முடியாமல் போகின்றது. இவ்வாறு நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம், இளைஞர் யுவதிகளின் எதிர்கால திட்டம் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக யாப்பு அமையப்பெற்றுள்ளது என்றார்