அமெரிக்காவில் மகிழுந்து வெடித்து சிதறிய சம்பவம், திட்டமிட்ட நாசவேலையாக இருக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் நஷ்விலி (Nashville) நகரில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும்,பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மகிழுந்து ஒன்று இன்று காலை மர்மமான முறையில் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
மகிழுந்து வெடித்து சிதறிய சம்பவம் குறித்து அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பான FBI விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இந்த விசாரணைகளிலேயே, மகிழுந்து வெடித்து சிதறியது, திட்டமிட்ட நாசவேலையாக இருக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.