அனைத்து ஊழியர்களையும், மாணவர்களையும் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் வரை வளாகத்திலிருந்து வெளியேறுமாறு கனடாவின் முன்னிலைப் பல்கலைக்கழமான குயின்ஸ் கோரியுள்ளது.
எதிர்வரும் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி வரை கிங்ஸ்டனுக்கு திரும்புவதைத் தவிர்க்குமாறு பல்கலைக்கழகம் அனைத்து மாணவர்களிடத்திலும் வலியுறுத்தியுள்ளது.
பல்கலை வளாகத்திலும் வெளியேயும் வசிக்கும் மாணவர்களும், சர்வதேச மாணவர்கள் உட்பட எவரும், குளிர்கால காலத்தில் வளாகத்தினுள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி ஒட்டுமொத்தமாக சர்வதேச மாணவர்கள் கனடாவுக்கான பயணத்தை முடிந்தவரை தாமதப்படுத்துமாறு சர்வதேச மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.