பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாண மனித உரிமை செயற்பாட்டாளர் கரிமா பலூச் (Karima Baloch) ரொரன்ரோவில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, உயர்மட்ட விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று, கனடிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள 50இற்கும் அதிகமாக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் இணைந்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
இவ்வாறான சம்பவம் நிகழுவது இது தான் முதல் முறை அல்ல என்றும், ஏற்கனவே பலூசிஸ்தானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த சஜிட் ஹுசேன் (Sajid Hussain) சுவீடனில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இதே போன்று ஆற்றங்கரையில் மர்மமாக இறந்து கிடந்தார் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.