கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இன்று காலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்
பல்லவராயன்கட்டு, சோலை மாதிரி கிராமம் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
32 வயதுடைய செல்வரத்தினம் பிரதீபன் என்ற இளைஞனே, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்துள்ள முழங்காவில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.