நத்தார் பண்டிகை தினமான இன்று, சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடியர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
நத்தார் பண்டிகை வாழ்த்து மடல்களில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டு பரஸ்பரம் நாடாளவிய ரீதியில் பகிரப்பட்டுள்ளது.
சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை பயன்படுத்தி தொடர்ச்சியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும் என்றும் வலிறுத்தப்பட்டுள்ளது.
மைக்கேல் கோவ்ரிக் மற்றும் மைக்கேல் ஸ்பேவர் ஆகியோர் உளவு பார்த்த குற்றச்சாட்டில் சீனாவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.