அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் எதிர்காலம் இனி சிறப்பாக இருக்காது என்று ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி (Hassan Rowhani ) தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி (Hassan Rowhani ), ஈரான் தனது வரலாற்றில் இரண்டு மனநலம் பாதித்தவர்களை சமாளிக்க வேண்டி இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் ஒருவர் சதாம் உசேன் என்றும் மற்றவர் டொனால்ட் டிரம்ப் என்றும், கூறிய அவர், ஒருவர் இராணுவப் போரிலும், மற்றொருவர் பொருளாதாரப் போரிலும் ஈடுபட்டனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், டிரம்பின் எதிர்காலம் இனி சிறப்பாக இருக்காது என்றும், அவர் கூறியுள்ளார்.