ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான ப்ரெக்சிட்டுக்கு பின்னரான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
எதிர்கால வர்த்தக சட்டங்கள் மற்றும் மீன்பிடி உரிமை போன்றவிடயங்களில் நீண்டகாலமாக இருந்துவந்த இணக்கப்பாடின்மை தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், எமது சட்டங்களையும், தீர்மானங்களையும் தங்களின் கட்டுப்பாட்டிற்கே பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் எழுத்து வடிவம் இன்னும் வெளியாக்கப்படவில்லை. எனினும் இது ஐரோப்பியா முழுவதற்கும் சிறந்த ஒப்பந்தமாக அமைந்திருப்பதாக பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.