மரியாள் மாதாவும் மாமனிதர் ஜோசப்ஐயா கொலைக்குற்றவாளிகளை தண்டிக்கவில்லையே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கவலை வெளியிட்டுள்ளார்.
மாதாவின் கோயிலிலே மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் ஜயா மாண்டார். வஞ்சகனின் பிள்ளை ஆனால் நஞ்சு மனக்குள்ளன் சதி நத்தார்நள்ளிரவு ஆராதனை ஆரவாரம் அல்லோலம் கண்டது
ஆண்டவன் ஜேசுபிரான அப்பமும் இரத்தத்தால் சிவந்தது அன்று மரியாள் மாதாவும் மௌனமாய் தலை குனிந்தார் மட்டக்களப்பு மண் கலங்கி அழுதது.
ஒப்பாரி வைக்கவும் ஓநாய்கள் விடவில்லை. ஊர்கூடி அஞ்சலி செலுத்த அச்சத்தால் பலரும் வரவில்லை ஆலையடிசோலையில் அமரருக்கு மண்போட அனேகர் பின்வாங்கிய இருண்ட காலம் அன்றிருந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதி இன்னுமில்லை. நியாயம் கிடைக்கவில்லை ஒருநாடு ஒரு சட்டம் குடும்பாட்சி குரல் கேட்டோம் கொடுங்கோலால் சிறைபட்டோம் குறையவில்லை அநீதி என்ற நிலை தொடர்கின்றது என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, 2005ஆம் ஆண்டு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து நத்தார் ஆராதனையின் போது ஜோசப் ஐயா தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று எதிர்காலத்தில் வரலாறுகளை மாற்றிவிடுவார்களோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சி வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் லோ.தீபாகரன் தெரிவித்துள்ளார்.
படுகொலைக்கான நீதிக்காக நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவரை நீதி கிடைக்காதது வேதனையான விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.