சிறிலங்காவில் முதலாவதாக படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் அமரர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் 35ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்றது.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியராளரின் சகோதரரான கவிஞர் ஓய்பெற்ற அதிபர் அக்கரைப் பாக்கியன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை பாக்கியராசா, மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நினைவுரைகளும் இடம்பெற்றன.