அமெரிக்காவை மிஞ்சி 2028ஆம் ஆண்டில், உலகில் மிகப்பெரிய பொருளாதாரமாக சீனா உருவெடுக்கும் என்று பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு மையத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றை கடுமையான ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால் திறம்பட கையாண்டதால், சீனாவின் பொருளாதார செயற்பாடுகள் மேம்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றையும் அதனால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியையும், சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் முன்பு கணிக்கப்பட்டதை விட 5 ஆண்டுகள் முன்னதாகவே அமெரிக்க பொருளாதாரத்தை சீனா மிஞ்ச உள்ளதாகவும் பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு மையத்தின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.