சிறிலங்கா முழுவதிலும் குறைந்தது 3 வாரங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும்படி ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் இருந்து மீண்டெழுவதற்காக இந்த ஊரடங்கை அமுல்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆரம்பத்திலிலேயே கம்பஹா மாவட்டம் முழுவதையும், முடக்கியிருந்தால், நாடு முழுவதிலும் தொற்று பரவாமல் தடுத்திருந்திருக்க முடியும் என்றும், அரசாங்கம் அதனை செய்யாமல் விட்டதே, இந்த அனர்த்தம் ஏற்படக் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.