எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்ச் செல்வம் தலைமையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான அ.தி.மு.க. வின் பிரசாரக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை வை.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பு இருவரும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த பொதுக்கூட்டத்தில், அமைச்சர்கள், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
விழா மேடையில் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் அமர்வதற்காக 94 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.