பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதன் பரவலான நன்மைகள் விரைவில் உணர ஆரம்பிப்போம் என்று ஒன்றாரியோ தடுப்பூசி பணிக்குழுவின் தொற்று நோய் நிபுணர் வைத்தியர் ஐசக் போகோச் (Isaac Bogoch) தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனாவுக்கு எதிரான இரண்டு உயிர் காக்கும் தடுப்பூசிகளை அணுகுவதன் மூலம் இந்த ஆண்டு நிறைவு செய்யும் நாடுகளின் சிறிய குழுவில் கனடாவும் உள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்கள் டிசம்பர் 24ஆம் திகதி முதல் அளவைப் பெறுகிறார்கள். அது மிகவும் உன்னதமானது’ என கூறினார்.
ஃபைசர்- பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி யை கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாகவே கனடா அனுமதித்தது.
மொடர்னா இன்க் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த கனடிய சுகாதாரதுறை கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.