இரணைமடு குளத்தின் இரண்டு வான் கதவுகள் 6 அங்குலங்கள் திறந்து விடப்பட்டுள்ளது.
குளத்திற்கு அதிகளவான நீர் வரத்து காணப்பட்டுகின்ற நிலையிலேயே குறித்த வான் கதவுகள் திறந்து விடப்பட்டது.
இதனால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
மேலும் கனகாம்பிகைக்குளம், அக்கராயன்குளம், பிரமந்தனாறு குளம் உள்ளிட்டவை வான் பாய்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.