சிறிலங்காவின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சபாநாயகரின் பாதுகாப்புப் படையில் உள்ள அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் வெளிப்படுத்தப்பட்டதை அடுத்து முதற்கட்டமாக அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் சுழற்சிமுறையில் பி.சி.ஆர்.பரிசோதனையும் நடைபெறவுள்ளது.