பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவரில் பிரித்தானியாவில் இருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கொரோனா வைரஸின் வகை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அது பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட புதிய மேம்படுத்தப்பட்ட கொரோனா ரைவஸ் வகையைச் சார்ந்தது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நபர் கடந்த 15ஆம் திகதி பிரித்தானியாவில் இருந்து விமானம் மூலம் கனடாவிற்குள் பிரவேசித்துள்ளார்.
இதனையடுத்து சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த அந்த நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான கொரோனா சோதனையிலேயே தொற்று உறுதியாகியுள்ளது.