ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று வீடு செல்ல அனுமதிக்கப்பட்டு, சென்னைக்குத் திரும்பியுள்ளார்.
அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும் எனவும், ரத்த அழுத்தத்தை கண்காணிக்கவும், மன அழுத்தமின்றி இலகுவான பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து விடுக்கப்பட்டதும், அவசரமாக தனி விமானத்தில் ரஜினி சென்னையில் உள்ள தமது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.