கொரோனா வைரஸுக்கு எதிராக சீனாவின் சினோபார்ம் தடுப்பு மருந்து 91 சதவீதம் பயனளிப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது.
சீனாவின் கொரோனா தடுப்பு மருந்தான சினோபார்ம் முதற்கட்ட முடிவில் 91 சதவீதம் பயனளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது என துருக்கி குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான சினோபார்ம் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் தற்போது பயன்பாட்டுக்குத் தயாராகியுள்ளன.
பிரித்தானியாவில் பரவி வரும் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரித்தானியா உடனான விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.
புதிய வகை கொரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரித்தானிய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது