பைசர் மற்றும் பயோஎன் டெக் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் இரண்டாவது தொகுதியை கொள்வனவு செய்வதற்குரிய பூர்வாங்க பணிகள் நடைபெற்றுள்ளதாக கொள்வனவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் தெரவித்துள்ளார்.
இந்த தொகுதியை ஜனவரி முற்பகுதியில் கனடாவிற்குள் கொண்டுவருவது தொடர்பில் ஆராய்வதாக அவர் கூறியுள்ளர்.
கனடியர்களுக்கான கொரோனா தடுப்பூசிக் கொள்வனவு செயற்பாடானது முழுமையான வகையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.





