கொரோனா தொற்றினால் மரணமடையும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில், யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





