ரொரன்டோவில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு முன்னால் அவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
தமது அன்புக்குரியவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு அவர்கள் வலியுறுத்தி பதாகைகளை தாங்கியவாறு நின்றிருந்தனர்.
சமூக இடைவெளிகளை பின்பற்றி நடத்தப்பட்ட இந்தக் கவனயீர்ப்பில் கணிசமானவர்கள் பங்கெடுத்திருந்தனர்.
இதேநேரம், ரொரண்டோவில் கொரோனா தொற்றுக்காலத்தில் 41பேர் உயிரிழந்துள்ளதோடு 128சிரேஷ்ட பிரஜைகளும், பராமரிப்பு இல்லங்களின் ஊழியர்கள் 69பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





