கல்முனை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதை அடுத்து பல பிரதேசங்கள் இன்றிரவு தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்முனைப் பகுதியில் இன்று வர்த்தகர்களுக்கு நடத்தப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையின் போது, தொற்றுக்குள்ளான 32 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இதையடுத்து, கல்முனை செலான் வங்கி வீதிக்கும் வாடி வீட்டு வீதிக்கும் இடைப்பட்ட பகுதிகளில் இன்று மாலை தொடக்கம், சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் நிறுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பிரதேசங்கள் இன்றிரவு 8.30 மணி தொடக்கம் தொடக்கம் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்தப் பகுதி மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளதுடன், இந்தப் பகுதி வழியான அனைத்து வாகனப் போக்குவரத்துகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.