சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுக்குள்ளாகிய மூவர் இன்று உயிரிழந்த நிலையிலேயே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளை, தற்போது, 20 கொரோனா தொற்றாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று புதிதாக 549 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 530 பேர் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும், 19 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இதுவரை இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை, 41 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது.