பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய குருக்கள், நிர்வாகிகள் மற்றும் திருவிழா உபயகாரர்கள் உள்ளிட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக, சுகாதாரத் துறைக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே, சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈழத்துச் சிதம்பரம் ஆலயத்தில் திருவாதிரை உறசவத்துக்கு சுகாதாரத் துறையினர் அனுமதி மறுத்திருந்தனர்.
அதேவேளை, கடந்த வியாழக்கிழமை பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதனைச் சுட்டிக்காட்டி, படங்களுடன் காரைநகரைச் சேர்ந்தவர்கள் சுகாதார அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதை அடுத்தே, பொன்னாலை ஆலயத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்பட்டமை தெரியவந்த்து.
இதையடுத்தே, ஆலயக் குருக்கள், நிர்வாகிகள், ஆலய உபயதாரர்கள் உள்ளிட்ட 15 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.