யாழ்.மாநகர சபையின், அனைத்து உறுப்பினர்களும் உறுதியான ஆட்சிக்காக வாக்களிக்கவேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கேட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஆர்னோல்ட் மீண்டும் முதல்வரானால் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டு சபை கலையும் நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே தான் சபையின் எஞ்சியகாலத்தினை வினைத்திறனாக கொண்டு செல்வதற்காக தாம் முதல்வர் போட்டியில் களமிறங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சபையின் தற்போதனைய ஆட்சிக்காலத்தைத் தக்கவைத்து அனைவருடனும் இணைந்து உறுதியான ஆட்சியை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.