ஹொங்கொங் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்றும், இது தமது உள்நாட்டு விவகாரம் என்றும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹொங்கொங் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 பேரை விடுவிக்குமாறு, அமெரிக்க தூதரகம் கோரிக்கை விடுத்திருந்தது.
இது குறித்து பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய, சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், அமெரிக்காவின் தலையீடு கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.
இது சீனாவின் உள்விவகாரம் என்றும், அதில் அமெரிக்கா தலையிட கூடாது என்றும் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.