புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவுக்கான விமானப் பயணங்களை இடைநிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட திரிபடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும், அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது மத்திய கிழக்கில் இருந்தே அதிகளவில் விமானங்கள் வருவதாகவும், இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து குறைந்தளவு விமானங்களே வருவதாகவும் சிறிலங்கா இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் நிலைமைகளை கருத்தில் கொண்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.