மொடர்னா தடுப்பூசியின் முழுமையான ஆய்வறிக்கையை இறுதி செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கனடிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கனடியர்களுக்கு மொடர்னா தடுப்பூசியை செலுத்துவதற்கு முன்னதாக அதன் முழுமையான விடயப்பரப்பினை ஆய்வு செய்வது தமது கடமை என்றும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
மேலும் மொடர்னா தடுப்பூசியின் மேம்பட்ட தகவல்களை அந்நிறுவனம் நேரடியாகவே கனடிய சுகாதாரத்துறையுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்கனவே இணக்கம் கண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.