உக்ரேனில் இருந்து சிறிலங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மூவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலுக்கு பின்னர் உக்ரேனில் இருந்து 180 சுற்றுலாப் பயணிகள் நேற்று முன்தினம் மத்தல விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.
இவர்களில் மூவருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை முதல் விமானத்தில் வந்த சுற்றுலாப் பயணிகள் பலர் விமான நிலையத்தை வந்தடைந்த போது சரியாக முக கவசங்களை அணியவில்லை என்றும், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.