மன்னார் – நானாட்டான், தோமஸ்புரி கிராம அலுவலர் ஆற்றில் நீராடிய போது, நேற்று மாலை காணாமல் போயுள்ளார்.
அருவி ஆற்றில், அரிப்பு பாலப் பகுதியின் கீழ், ஐந்து கிராம அலுவலர்கள் உள்ளிட்ட 6 பேர் நீராடியபோது திடீரென நீர்வரத்து அதிகரித்ததால், ஆறு பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் சிறிலங்கா கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் நான்கு கிராம அலுவலர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் மீட்கப்பட்டனர்.
எனினும் தோமஸ்புரி கிராம அலுவலர் இதுவரை மீட்கப்படாத நிலையில், அவரை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் மற்றும் பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர்.