ஒன்ராரியோவின் தடுப்பூசி திட்டத்தின் மூன்று கட்ட விபரங்களை தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான ரிக் ஹில்லியர் (Rick Hillier) வெளியிட்டுள்ளார்.
அதன்படி முதல் கட்டம் மார்ச் 2021இல் முடிவடைகிற நேரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று ஒன்ராரியோ மாகாண அரசு எதிர்பார்க்கின்றது
அதன் பிறகு இரண்டாம் கட்டத்தில் அத்தியாவசிய தொழிலாளர்கள் தடுப்பூசி பரிசீலனைக்கு சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
மாகாணத்தின் பெரும்பகுதியில் உள்ள 7.5 மில்லியன் மக்களுக்கு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் ஒரு நாளைக்கு ஒரு இலட்சத்து 50ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
3ஆவது கட்டம் தொடங்குகிறது. காய்ச்சல் அல்லது சிங்கிள்ஸ் (கொப்புளப் புண்கள் உண்டாக்கும் ஒருவகைத் தோல் நோய்) தடுப்பூசி போலக், கொவிட்-19 தடுப்பூசி சிகிச்சையளிக்கப்படுகிறது.
இரண்டாம் கட்டம் நிறைவடையும் தினத்திலிருந்து மூன்றாவது கட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதோடு இதில் அனைத்து தரப்பினரும் உள்ளீர்க்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.