கனடியர்கள் நாட்டின் எல்லைக்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பொறிமுறையொன்றை வகுப்பது பற்றி ஆராயப்பட்டுள்ளதாக அமைச்சர் டொமினிக் லெப்ளாங்க் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக விமானங்கள் பயப்பதற்கு முன்னதாகவும் அதேபோன்று தரை எல்லையிலும், துறைமுகங்களிலும் விசேட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கனடிய மண்ணில் காலடி வைப்பதற்கு முன்னதாக அனைவரையும் பரிசோதனைக்குட்படுத்துவதன் ஊடாகவோ உள்நாட்டில் வைரஸ் பரவலுக்கான முற்றுப்புள்ளிளை வைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.