சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் முக.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவேன் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“முக.ஸ்டாலின் எந்த தொகுதியில் களம் இறங்கினாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவது உறுதி.
இந்தமுறை தேர்தலில் தி.மு.க.வுக்கும்,அ.தி.மு.க.வுக்கும் போட்டி இல்லை. நாம் தமிழர் கட்சிக்கும், தி.மு.க.வுக்கும் தான் இம்முறை போட்டி இருக்கும். .” என்றும் குறிப்பிட்டுள்ளார்.