அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தாதி ஒருவருக்கு, 8 நாட்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவை சேர்ந்த தாதி ஒருவர் கடந்த 18ம் திகதி பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக் கொண்ட நிலையில், அவருக்கு கடந்த 24ம் திகதி மாலை குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, 26ம் திகதி அவருக்கு கொரோனா பரிசோதனையை செய்யப்பட்ட போது, அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தடுப்பூசி போடுவதற்கு முன்னரே, குறித்த தாதிக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி போட்ட பின்னர் கொரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்திகள் உடலில் உருவாக சுமார் 10 முதல் 14 நாட்கள் வரை தேவைப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.