மட்டக்களப்பில் நேற்று 63 வர்த்தகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நகர், பஸார் வீதி மற்றும் காத்தான்குடி நகர பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் என 1214 பேருக்கு நேற்று பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போதே, 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் அதிகமானவர்கள் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இன்று தொடக்கம், ஐந்து நாட்களுக்கு காத்தான்குடி நகரப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மட்டக்களப்பிலும், காத்தான்குடியிலும் பல கடைகள் சுகாதார அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நகரம் முழுவதிலும் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.