மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் 12பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று முதற்கட்டமாக 436 பேருக்கும் இரண்டாம் கட்டமாக 130 பேருக்கும் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இந்த தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.
இதில் முதற்கட்ட சோதனையில் 9பேருக்கும் இரண்டாவது கட்ட சோதனையில் 3பேருக்கும் கொரோனா உறுதியானது.
மருதனார்மடம் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட 20ஆவது நாளான இன்றுவரை மொத்தமாக 130 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.