மாகாண சபைகளை ஒழிப்பது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமமானது என்று சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“13 ஆவது திருத்தம் 1987 ஆம் ஆண்டின் இந்திய – சிறிலங்கா உடன்பாட்டின் விளைவாகும்.
13 ஆவது திருத்தத்துக்கு அமையவே, மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.
எனவே, மாகாண சபைகளை ஒழிப்பது இலகுவான விடயமல்ல.
13 ஆவது திருத்தத்தை முற்றிலுமாக நீக்கினால், இந்தியா எம் மீது வருத்தம் கொள்ளும்.
பிராந்தியத்தில், இந்தியாவுடனான நட்பு சிறிலங்காவுக்கு மிகவும் முக்கியமானது.
எனவே, மாகாண சபைகளை ஒழிப்பது என்பது நெருப்புடன் விளையாடுவது போன்றது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.